பொய் பேசுவதில் கில்லாடியான ராசிக்காரர்கள் யார் என்று தெரியுமா?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அனைவருமே ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பொய் கூறியிருப்பார்கள். அப்படி பொய் கூறுவது ஒரு கலை என்றால் அதில் கில்லாடிகளாக இருப்பார்கள் சில ராசிக்காரர்கள். அவர்கள் கூறுவதே பொய் என்று தெரியாத அளவிற்கு பொய் பேசுவார்கள். அப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் பொய் பேசுவதில் வல்லவர்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம் : மிதுன ராசி கொண்டவர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளித்துவிடும் திறமைக் கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல பேச்சுத் திறமை இருக்கும் என்பதால் அதை வைத்தே பலரது மனங்களை கவ்விவிடுவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை திரித்து பொய்க் கூறுவதில் மாஸ்டர் டிகிரி செய்தவர்கள். அதேபோல் அவர்கள் நேரடியாகப் பொய் கூறாமல் உண்மையிலேயே பொய்யைக் கலந்து நம்பும்படியாக பொய் பேசுவார்கள்.

துலாம் : இவர்கள் நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பொய் கூறுவார்கள். ஆனால் அது யாராலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு சமாளித்து மலையேறுவதில் கெட்டிக்காரர்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும், நல்லது செய்ய வேண்டும், நன்மை என்பதன் அடிப்படையில் நேர்மை, உண்மையை மறைத்து பொய் கூறுவதில் தப்பு இல்லை என்று நினைப்பவர்கள். எனவே இவர்களை சூழ்நிலைகள்தான் அடுக்கடுக்காக பொய் பேச வைக்கும்.

விருச்சிகம் : இவர்கள் பொய் கூறுவதில் ஸ்மார்டாக நடந்துகொள்வார்கள். குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து தப்பிக்க பொய் கூறி தப்பிப்பார்கள். அதில் சில உண்மைகளும் இருக்கும். பொய் கூறுவதையும் நம்பிக்கையுடன் கூறுவார்கள். அதேபோல் மற்றவர்கள் பொய் கூறினாலும் அதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். இவர்களிடம் பொய் கூறி தப்பிப்பது கடினம்.

மற்ற ராசிக்காரர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று சொல்லவில்லை. இவர்களை போல் திறமையாக பொய் சொல்ல மாட்டார்கள் அவ்வளவு தான்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »