சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், திருவிழாவை முன்னிட்டு கோவிலில் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

2-வது நாளான நேற்று காலை கோமதி அம்பாள் சன்னதியில் யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அம்பாளுக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகமும், அலங்கார ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அர்ச்சகர்கள் முககவசம் அணிந்து பூஜைகளை நடத்தினர்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »