மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக் கொட்டு உற்சவ விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 2-ம் பிரகாரத்தில் வலம் வந்தார்.

ஆடிப்பூரத்தையொட்டி நேற்று காலை 10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அம்மனுககு ஏற்றி இறக்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை, கோவில் பட்டர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »