இந்த பரிகாரம் செய்தால் திருமண தோஷம் விரைவில் நீங்கும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் “கடகம், சிம்மம், கன்னி” போன்ற சுக்கிரன் “பகை மற்றும் நீச்சம்” பெறும் ராசிகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு சுக்கிரனால் “திருமண தோஷம்” ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு பித்ரு சாபங்களினாலும் திருமண தோஷம் ஏற்படுகிறது. இந்த திருமணம் தோஷம் நீங்கி சிறந்த வரன் மற்றும் வது உடன் திருமணம் நடக்க கீழ்கண்ட பரிகாரங்களை செய்யலாம்.

திருமண தோஷம் கொண்ட பெண்கள் தங்கள் ரத்த வழி உறவுகளில், பூப்படையாத 10 -12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை உங்கள் வீட்டிற்கு ஒரு வியாழக்கிழமை அன்று வரவழைத்து சைவ உணவு விருந்து அளிக்க வேண்டும். விருந்து உண்டு முடித்ததும் சந்தனம், குங்குமம், மஞ்சள் நிற ஜாக்கெட் துணி, ஐந்து மஞ்சள் கிழங்கு, மூன்று முழம் மல்லி பூ, கண்ணாடி வளையல்கள், அதனுடன் நீங்கள் விரும்பும் தொகையை காணிக்கையாக ஒரு புது தட்டில் வைத்து, அப்பெண் குழந்தையை கிழக்கு திசை பார்த்தவாறு நிற்கச் சொல்லி கொடுக்க வேண்டும்(தட்டை திருப்பி வாங்கி கொள்ள கூடாது). இவ்வாறு செய்த மூன்று மாத காலத்திற்குள் திருமண தோஷம் விலகி திருமண முயற்சிகள் வெற்றி பெரும்.

திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் அல்லது சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி, வழிபட்டு வர வேண்டும். இது போன்று 27 வெள்ளிக்கிழமைகள் செய்து வர திருமண தோஷம் நீங்கி விரைவிலேயே நல்ல வரன் மற்றும் வது அமையும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »