நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஒரு சிலர் தோஷத்திற்கான பரிகாரங்களை முறையாக செய்தாலும் கூட அந்த தோஷம் நீங்காமல் அதற்கான துன்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது கர்மவினை. ஆகையால் ஒருவரது ஜாதகத்தில் எந்த கர்மவினையானது நடக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்கள் செய்யவேண்டும். இது குறித்து விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

பொதுவாக மூன்று வகையான கர்மவினைகள் உள்ளன

த்ருத கர்மா – தெரிந்தே செய்த பாவங்கள்
த்ருத அத்ருத கர்மா – தெரிந்தே பாவத்தை செய்து பின் மன்னிப்பு கேட்பது
அத்ருத கர்மா – தெரியாமல் செய்த பாவங்கள்

த்ருத கர்மா : ஒருவர் முன்ஜென்மத்தில் தெரிந்தே செய்த பாவங்களால் அவர்களது ஜாதகத்தில் அந்த கர்ம வினை தொடரும். உதாரணத்திற்கு வயதான காலத்தில் தாய் தந்தையரை கவனிக்காமல் விடுவது. உற்ற நண்பருக்கு துரோகம் செய்வது, அடுத்தவரின் மனைவியை கவர்வது போன்றவையெல்லாம் தெரிந்தே செய்யும் பாவங்கள்.இதற்கு பரிகாரம் செய்தாலும் பெரிதாக பயன் தராது. ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வணங்கினால் அவர்கள் பசியாற உண்டு வாயார வாழ்த்துவதன் மூலம் அடுத்த தலைமுறையினரை இது பாதிக்காமல் இருக்கும்.

த்ருத அத்ருத கர்மா : ஒருவர் முன்ஜென்மத்தில் பாவத்தை செய்து, பின்பு அதற்காக பிராய்ச்சித்தத்தை செய்யாமல் வெறும் வருத்தம் மட்டுமே படுவதால் அந்த கர்ம வினை இந்த பிறவியிலும் தொடரும். இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோர்க்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வை இருக்கும். இந்த கர்ம வினையை பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும்.

அத்ருத கர்மா : முற்பிறவியில் நாம் பிறருக்கு தெரியாமல் கொடுத்த கஷ்டங்களால் அந்த கர்ம வினை இந்த பிறவியிலும் தொடரும். அனால் இதை இறைவன் எளிதில் மன்னித்துவிடுவார். ஆகையால் இறைவனிடம் மனமுருகி வேண்டினாலே இந்த வினை தீரும். இதற்கு சிறப்பு பரிகாரங்கள் எதுவும் தேவை இல்லை.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »