சர்ப்ப தோஷம் நீக்கும் கல் கருடன்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மேதாவி முனிவரின் தவமிருந்த பக்தியைக் கண்டு திருமகள் அவருக்கு மகளாகப் பிறந்து, திருமண வயதில் மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்ணன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் ஆகிய ஐந்து வடிவங்களில் உருமாறி அடியவராக முனிவரின் ஆசிரமம் வந்து வாசுதேவனாக உள்ள பெருமாள் வஞ்சுளவல்லித் தாயாரை மணந்தார்.

வாசுதேவன் மூலவராகவும் மற்ற நால்வரும் மூலவருக்குப் பின்பும் உள்ளனர். இங்கு தாயாருக்குத்தான் முதலிடம் தாயார் வஞ்சுளவல்லி நம்பிக்கை நாச்சியார் என்ற திரு நாமத்தோடு பெருமாளுக்குப் பக்கத்தில் நின்ற கோலத்தில் கும்பகோணத்திற்கு அருகில் நாச்சியார் கோயிலில் சேவை சாதிக்கிறார். இவர் மிகவும் வரப்பிரசாதி. இவரை வழிபட திருமணத்தடை புத்திர  பாக்கய தடை நீங்கும்.

இத்தலத்தில் கல் கருடன் சாளக்கிராம சிலை வடிவில் பெருமானின் மூலஸ்தானத்துக்குக் கீழ் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவ காலங்களில் கல் கருடன் வாகன மண்டபத்திற்கு வரும் போது கருடனைச் சுமப்பவர் நால்வர் மட்டுமே. வெளியில் வந்தவுடன் எடை கூடி 16 பேர் தூக்குவார்களாம்.

சிறிது தொலைவு சென்ற பிறகு 32 பேர் கருடனை சுமப்பார்களாம். கோயில் வாயிலை அடைந்ததும் 64 பேர் சுமப்பார்களாம். பெருமானைத் தாங்கி வரும் கல் கருடனுக்கு வியர்த்துக் கொட்ட, வஸ்திரங்கள் அனைத்தும் வியர்வையால் நனைத்து விடும்.

கருட சேவை முடிந்து கல் கருடன் தனது சன்னதிக்கு வரும் போது படிப்படியாக கருடனின் எடை குறைந்து விடும். இந்த கல் கருடனுக்கு 7 அல்லது 11 வியாழக்கிழமைகள் 3 நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட கடுமையான சர்ப்ப தோசங்கள் நிவர்த்தியாகும். கனவுகளில் சர்ப்பங்கள் வருவது நிற்கும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »