திருஷ்டி பொருளை தெரியாமல் மிதித்து விட்டால் என்ன பரிகாரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருஷ்டிக்காக சில விஷயங்களை வீடுகளில் மற்றும் கடைகளில் செய்வதுண்டு. அந்தப் பொருட்களை எல்லாம் முச்சந்தியில் கொண்டு வந்து போடுவது, வீதியில் வீசுவதுமாக இருப்பார்கள். அவற்றை பொதுவாக கால் படாத இடங்களில் தான் போட வேண்டும். ஆனால் வீதியில் வீசுவதால் அது மற்றவர்களுக்கும் ஆபத்தாக வருகிறது. வாகனங்களில் செல்லும் பொழுது கூட இது போல் அவற்றை மிதித்து விட்டு செல்கிறோம். இதனால் வரும் ஆபத்துக்கள் என்ன? இதில் இருந்து எப்படி தப்புவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

வீதியில் நடக்கும் பொழுது கவனக்குறைவால் திருஷ்டி சார்ந்த பொருட்களை தெரியாமல் மிதித்து விடுகிறோம். முச்சந்தியில் இருக்கும் எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய், மிளகாய், உப்பு, கடுகு போன்ற திருஷ்டி சார்ந்த பொருட்களை பார்த்தால் உடனே விலகி நடப்பது நல்லது.

அது போல் வாகனங்களில் செல்பவர்கள், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஆனாலும் இது போன்ற திருஷ்டி சார்ந்த பொருட்களை கடந்து செல்வதால் அதனுடைய நெகட்டிவ் ஆற்றல்கள் உங்களைத் தாக்கும் அபாயம் உண்டு. இதனால் தேவையில்லாத மனக் கஷ்டங்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. எதிலும் மந்தமாகவும், சோர்வாக காணப்படுவீர்கள். ஓரிரு நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும். எனினும் இது போன்ற பிரச்சினைகள் நமக்கு ஏற்படாமல் இருக்க எளிய வழி ஒன்று உள்ளது.

அதாவது நீங்கள் வாரம் ஒரு முறையாவது குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரம் மற்றும் சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொத்து வேப்பிலையை போட்டு குளிப்பது நல்லது. குழம்புக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை போட்டு விடாதீர்கள். பூஜைக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது மஞ்சள் கிழங்கு கல்லில் இழைத்து சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

அது போல் வாகனங்கள் வைத்திருப்பவர்களும் வாரம் ஒரு முறையாவது வாகனங்களை கழுவும் பொழுது அந்த தண்ணீரில் இதே போல் சிறிதளவு பச்சை கற்பூரம், வேப்பிலை, மஞ்சள் தூள் கலந்து கொள்வது சிறந்த பரிகாரமாக இருக்கும். வாரம் ஒரு முறை உங்களுக்கும், உங்கள் வாகனத்திற்கும் இது போல் செய்வதால் உங்களுக்கு வர இருக்கும் திருஷ்டிகள் பதிப்பு, நெகட்டிவ் ஆற்றல்கள் தடுக்கப்படும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »