கெட்ட கனவுகளால் தொல்லையா? அப்ப இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்க


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இரவில் தூங்கச் சென்றாலே தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, தேவையற்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கம் கெடுபவர்களுக்கு, வாழ்க்கையில் தீராத துயரத்தின் மூலம் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சிவபெருமானை மனதார நினைத்து, நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு, அதன் பின்பு இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு, சிவபெருமானே நீயே துணை என்று சொல்லிவிட்டு, தூங்கச் செல்லுங்கள். கட்டாயம் மன நிம்மதி கிடைத்து தேவையற்ற மன பயம் நீங்கி, எதிர்மறை ஆற்றலின் மூலம் வரக்கூடிய தாக்குதல்கள் நீங்கி, நிம்மதியான தூக்கம் கட்டாயம் வரும் என்பதில் சந்தேகமே கிடையாது. உங்களுக்காக சிவபெருமானின் மந்திரம் இதோ!

சவ்வும் நம சிவாய நம
ஸ்ரீயும் நம சிவாய நம
அங் உங் வங் சிவாய நம
ஓம் நம சிவாய நம

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு உறங்கினால் கட்டாந்தரையில் படுத்தால் கூட, பட்டு மெத்தையில் சொர்க்கத்தில் தூங்குவது போல ஒரு மன அமைதி கிடைக்கும். திருட்டு பயம் நீங்கும். பேய் பிசாசு கனவு கட்டாயம் வரவே வராது. துஷ்ட சக்திகள் உங்களை நெருங்க முடியாது. இதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு உடலில் இருக்கும் நோயால், அதன் மூலம் ஏற்படக்கூடிய வலியால் அவதிப்பட்டு வருவார்கள். அவர்களால் உடலில் ஏற்படும் உபாதைகளால் தூங்கவே முடியாது. அப்படிப்பட்ட உபாதைகளைக் கூட கட்டுப்படுத்தக் கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் இந்த மந்திரத்தை தூங்கச் செல்லும்போது உச்சரித்துக் கொண்டே வாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »