கார்த்திகை மாதம் பிறப்பு: சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கார்த்திகை மாதம் பிறந்தாலே சரணகோ‌ஷமும், எங்கு பார்த்தாலும் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்களையும் பார்க்க முடியும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டலபூஜை, மகர விளக்கு காலத்தில் ஐயப்ப பக்தர்கள் எல்லோராலும் செல்ல இயலாது.

தினமும் ஆன்-லைனில் முன்பதிவு செய்த ஆயிரம் பேரும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 2 ஆயிரம் பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டு நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு காலங்களில் அதிகபட்சமாக மொத்தம் ஓரு லட்சம் பக்தர்கள் பட்டுமே செல்ல முடியும். வழக்கமாக மண்டல பூஜை நாளான டிசம்பர் 27 மற்றும் மகரவிளக்கு நாளான ஜனவரி 14 ஆகிய இரு தினங்களில் மட்டுமே பல லட்சம் பக்தர்கள் வழிபட செல்வது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தரிச னத்துக்கு செல்லும் பக்தர்களுக்கான முன்பதிவு அனைத்தும் நிறைவடைந்து விட்டது.

இதனால் ஆண்டு தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடிகட்டி ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் நெருக்க டியான இந்த சூழ்நிலை காரணமாக சபரிமலை யாத்திரை செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். ஆண்டு தோறும் அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் இதே நாளில் குறைந்த பட்சம் 3 ஆயிரம் பேர் மாலை அணிவார்கள். ஆனால் இன்று சுமார் 200 பேர்தான் மாலை அணிந்தனர்.

அதேபோல் மகாலிங்க புரம், மடிப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் அய்யப் பன் கோவில்களிலும் மிக குறைந்த அளவிலேயே பக்தர்கர் மாலை அணிந்தனர்.

மாலை அணிவது பிரச்சினை அல்ல. மாலை அணிந்த பிறகு விரதம் இருந்து இருமுடி கட்டி பதினெட்டு படிகள் வழியாக சென்று ஐயப்பனை தரிசிக்க வேண்டும். அது முடியாது என்பதால் பலர் இந்த ஆண்டு மாலை அணிவதை தவிர்த்து விட்டனர்.

மடிப்பாக்கம் ஐயப்பன் கோவிலில் பதினெட்டு படிகள் உள்ளது. மேலும் அங்கு கேளர நம்பூதிரிகள்தான் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை முறைகள் படியே பூஜை செய்கிறார்கள்.

வழக்கமாக சபரிமலை செல்ல இயலாதவர்கள் இருமுடி தாங்கி பதினெட்டு படிவழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு இங்கும் பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாலை அணிய வரும் பக்தர்களின் மாலையை சன்னிதானத்தில் வைத்து பூஜித்து கொடுத்தனர். குருசாமி மார்கள் மட்டுமே மாலை போட்டுவிட்டனர்.

அதேபோல் இருமுடி கட்டி வருபவர்களும் 3 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும் கோவிலில் வைத்து இருமுடி கட்ட அனுமதி இல்லை. கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வரவேண்டும். படியேறி தரிசிக்கலாம். நேரடியாக நெய்அபிஷேகம் செய்ய முடியாது. இருமுடியில் எடுத்துவரும் நெய்யை ஒப்படைத்துவிட வேண் டும். அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக வழங்கப் படும். 10 வயதுக்கு கீழ் மற்றும் 60 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு அனுமதி இல்லை.

ராஜா அண்ணாமலை புரம் ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் வழக்கம்போல் படியேற ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆண்டு தோறும் ஐயப்பனை விரதம் இருந்து வழிபட செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மாலை அணியாமல் இன்று முதல் விரதம் தொடங்கி விட்டனர். அவர்கள் தங்கள் வீடுகளிலேயே நெய்தீபம் ஏற்றி தினமும் ஐயப்பன் பூஜை செய்கிறார்கள்.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் புனித நீராடினார்கள்.

இதைத்தொடர்ந்து சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷத்துடன் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். குரு சாமிகள் மற்ற சாமிகளுக்கு மாலை அணிவித்தனர். கருப்பு மற்றும் நீல உடையுடன் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்திருந்தனர். பின் னர் பகவதி அம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய் தனர்.

இதேபோல் பார்வதிபுரம் ஐயப்பன் கோவிலிலும் மாலை அணிந்து விரதம் தொடங்க ஐயப்ப பக்தர்கள் வந்திருந்தனர்.

நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »