தொழில் வளர்ச்சியில் வாஸ்துவின் பங்கு


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தொழிற்சாலையானாலும், கடையானாலும் அவற்றை தொடங்குவதற்கு முன்பு ஓரளவுக்கு அறிவியல் பூர்வமான வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடித்தால் வெற்றி கிட்டும் என்பது அனுபவசாலிகள் கருத்து.

எனவே, தொழில் தொடங்குவதற்கான நிலத்தை தேர்வு செய்யும்போது அந்த நிலம் மேற்கு, தெற்குபுறம் நிலமட்டம் உயரமாகவும், கிழக்குபுற நிலமட்டம் சற்று தாழ்வாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் நிலம் சதுரமாகவோ, செவ்வகமாகவோ, எந்தவித குறைபாடுகளோ இல்லாதவாறு இருக்க வேண்டும்.

தொழிற்சாலை கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் பெரிய அளவில் நிலமட்டத்துக்கு கீழாக ஒரு தொட்டியை ஏற்படுத்த வேண்டும். கட்டிடத்தின் புற அளவுகள் “குழிகணக்கு” வாயிலாக தேர்வு செய்து எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்கிறது என்றும், எந்த நட்சத்திரத்தில் அந்த பரப்பளவு வந்துள்ளது என்பதை பொறுத்தே அந்த தொழிற்சாலையின் வளர்ச்சியை நிர்ணயம் செய்ய முடியும்.

மேலும் தொழிற்சாலையின் மெயின் வாயில் தொழிலின் தன்மைக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ஆனால் எல்லா தொழிலுக்கும் ஒரு குறிப்பிட்ட குழிகணக்கு பரப்பளவும் ஒத்துவராது. தொழிற்சாலைக்கு தேவையான மின்சார வசதியை தென்கிழக்கு மூலையில் நிர்மானித்து கொள்ளலாம். ஆனால் மேற்கு, தென்மேற்கு திசையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தையும் வடமேற்கு மூலையில் சேகரித்து வைக்கும்போது, அந்த பொருட்கள் வெகு சீக்கிரம் விற்பனையாகும். இதுபோன்ற வாஸ்துகளை உரிய நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »