திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடக்கின்றன. இதில் கார்த்திகை மாதம் நடைபெறும் புஷ்பயாகம் சிறப்பு வாய்ந்தது. இதனையொட்டி கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அப்போது உற்சவர்களுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புஷ்பயாகத்தையொட்டி மல்லிகை, ரோஜா, கனகாம்பரம், லில்லி, இக்சோரா உள்பட 14 வகையான 7 டன் பூக்கள் கூடை கூடையாக தேவஸ்தான பூங்காவிலிருந்து விழா நடக்கும் மண்டபத்திற்கு ஊழியர்களால் எடுத்து வரப்பட்டது. மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை உற்சவர்களுக்கு அந்த பூக்களால் புஷ்பயாகம் நடத்தப்பட்டது. அந்த பகுதியே மலர்களின் நறுமணத்தால் பக்தி பரவசமாக இருந்தது.

இதில் கோவில் அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, துணை அதிகாரி ஹரிந்திரநாத், பூங்கா முதன்மை அதிகாரி சீனிவாசலு, பேஷ்கார் ஜெகன் மோகனாச்சாரியலு, பாலிரெட்டி, பாதுகாப்பு அதிகாரி வீரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையொட்டி கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »