நான் என்னும் அகந்தை அழிக்கும் அங்காள பரமேஸ்வரி பாடல்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நான் என்னும் அகந்தை அழிய கீழ்வரும் இந்த அங்காள பரமேஸ்வரி பாடலை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நான் தான் எல்லாம்! என்று சிலருக்கு ஒரு நினைப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆணவமும், அகம்பாவமும் உச்சிக்கு ஏறி, தான் தான் எல்லாம்! தனக்குத்தான் எல்லாம் தெரியும்! என்ற எண்ணங்கள் மேலோங்கும். இப்படிப்பட்டவர்கள் சீக்கிரமே அழுது வடியும் சூழ்நிலை உருவாகும் என்பதை உணராதவர்கள் என்று தான் கூற வேண்டும்.

எவ்வளவு பெரிய பேரும், புகழும் கிடைத்தாலும் தலைகணம் கொள்ளாமல் யாரால் சாதாரணமாக இருக்க முடிகிறதோ அவர்களுக்கே வெற்றி எப்போதும் நிரந்தரமாக இருக்கும். அகம்பாவம் கொண்டவர்களிடம் வெற்றி எனும் தேவதை நிலைப்பது இல்லை. இது போன்றவர்கள் இந்த அந்தாதி பாடல் தினமும் பாராயணம் செய்தால் மிகப்பெரிய வெற்றியையும் தன்வசம் ஆக்கிக் கொள்ளலாம்.

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதிப் பாடல்:

தான் தோன்றி தரணியில் தந்திடும் நின் புகழ் முன்பே
வான் தோன்றி வருமுன்னை வந்தம்மா நின்
புகழ் பாட யான் தோன்றி என்றும் நின்னருள் பரப்பியே
நினைவில் நானெனும் நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே!

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »