ஸ்லோகம் தெரியாதா? இதை மட்டும் சொல்லுங்க போதும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

‘எனக்கு ஸ்லோகமும் தெரியாது, மந்திரமும் புரியாது’ என்று சிலர் வருந்தலாம்.‘அம்பாளை வழிபட எனக்கு எந்த ஜபமும் தெரியாதே…’ என்று கவலைப்படலாம்.

கவலையே வேண்டாம். மந்திரம் தெரியாமல் போனால் பரவாயில்லை. ஸ்லோகங்கள் தெரியவில்லையே என்று கவலைப்படவேண்டாம். ஸ்தோத்திரங்கள் தெரியாதே என்று புலம்பவே வேண்டாம்.

‘ஓம் லலிதாதேவியே நமஹ’ என்று சொன்னால் போதும். இதை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னால் போதும். பூஜையறையில் அமர்ந்து, 108 முறை சொல்லி, அம்பிகையை வழிபடுங்கள். தினமும் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள்.முடியும்போதெல்லாம் சொல்லுங்கள். அனைத்து நலன்களையும் தந்தருள்வாள் தேவி.

இப்படி 108 முறை சொல்லும் போது, அம்பாள் படத்துக்கோ அல்லது விக்கிரகத் திருமேனிக்கோ செவ்வரளி மலர்களோ அல்லது செந்நிற மலர்களோ கொண்டு அர்ச்சித்து ஆத்மார்த்தமாக வழிபடுவது இன்னும் விசேஷம். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். ஐஸ்வரியம் குடிகொள்ளும். சந்தோஷமும் நிம்மதியும் நிலைக்கும்.

எல்லா நாட்களிலும் இதை சொல்லலாம். செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் மறக்காமல் சொல்லுங்கள். மாங்கல்ய வரம் தருவாள். மாங்கல்ய பலம் தருவாள். கடன் தொல்லையில் இருந்தும் தரித்திர நிலையில் இருந்தும் மீட்டெடுத்து அருளுவாள் தேவி.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »