திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 21-ந்தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணிக்குள் கோவிலுக்குள் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ளஅனுமதி இல்லை. கோவிலின் கருவறையில் முருகப்பெருமானை தரிசிக்க அனுமதிக்கப்படும். மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலின் பிரதான நுழைவுவாயிலில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்குளம் சந்து வழியாக கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அன்று இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
திருக்கார்த்திகை தினமான 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மாலை 4 மணிமுதல் இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் கோவிலின் பிரதான நுழைவு வாயில் வழியே கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் கோவிலின் திருக்குளம் சந்து வழியே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6 மணிக்கு மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »