






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
பெரம்பலூர் மகா சித்தர் கள் டிரஸ்ட் சார்பில் எளம் பலூர் பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப் பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பிரம்மரிஷி மலையில் மலை உச்சியில் வருகிற 29-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக ஆயிரத்து 8 மீட்டர் நூலால் ஆன திரி தயாரிக்கும் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் மாலை 6 மணியளவில் பிரமாண்ட செப்பு கொப்பரையில் ஆயி ரத்து 8 மீட்டர் திரியில் 300 கிலோ நெய் மற்றும் ஆயிரம் லிட்டர் விளக்கு எண்ணை மற்றும் 108 கிலோ கற்பூரம் இடப்பட்டு மகா தீபம் ஏற்றப் பட உள்ளது.
விழாவை முன்னிட்டு மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகளும் நடைபெற உள்ளது. மேலும் சாதுக்களுக்கு வஸ்திர தானமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.
விழாவில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அண் ணாமலை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்தி பன், சிவசேனா மாநில கொள்கை பரப்பு செயலாளர் சசிக்குமார் மற்றும் உயரதிகா ரிகள், நீதிபதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, இயக்குநர்கள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன் சுவாமிகள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.