நாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

முருகப்பெருமானுக்கு உகந்த நாள், திருக்கார்த்திகைத் திரு நாள். திருக்கார்த்திகை நாளன்று, முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு விரதமும் இருந்து வழிபட்டால், அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான்.

எல்லா மாதங்களிலும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகையை மட்டும் ‘திருக்கார்த்திகை’ என்று அழைப்பது வழக்கம். அந்த இனிய திருக்கார்த்திகை திருநாள், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 14-ந் தேதி (29.11.2020) அன்று வருகிறது.

அதற்கு முதல் நாள், பரணி தீபமாகும். பாவங்கள் போக்கும் பரணி தீப வழிபாட்டினையும் நாம் மேற்கொள்ள வேண்டும். நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில் மட்டும்தான். ‘பரணி தரணி ஆளும்’ என்பார்கள். எனவே பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை வழிபட்டால், தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும்.

‘கலியுகத்தில் பாவங்கள் அதிகரிக்கும்’ என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் செய்த பாவங்கள் எல்லாவற்றிற்கும் பரிகாரமாகத்தான், ஆலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றோம். பரணி தீபத்தன்று விநாயகர், முருகப்பெருமான், நந்தீஸ்வரர், உமா மகேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். மறுநாள் கார்த்திகையும் வருகின்றது. அன்றைய தினம் முழுமையாக கந்தன் புகழ்பாடிக் கைகூப்பித் தொழுதால் வந்த துயரங்கள் வாசலோடு நிற்கும். வருங்காலம் நலமாக அமையும்.

தீபம் ஏற்றுவதன் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள்தான், திருக்கார்த்திகை. முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று மாலையில் நம் இல்லங் களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமை யும். வீட்டில் நல்லெண்ணெயிலும், ஆறுமுகப் பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெயிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மரபு.

வீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும். மறுநாள் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். பூஜை அறையில் முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானின் படத்தோடு, அவனது தம்பியான முருகப்பெருமானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண் டும். பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண் ணெய் ஊற்றி, கந்தனுக்கு பிடித்த கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்தனுக்குரிய பதிகங் கள், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.

கார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச் சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகம் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும். ஜோதி வடிவான இறைவனை நினைத்து சிவாலயங்கள் தோறும் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்தால் செடிகள் வளரும். தோட்டத்தில் காய்கனிகள் அதிகம் காய்க்கும்.

இந்த விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். இழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். எனவே கந்தன் புகழ்பாடி கார்த்திகையை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »