திருமலை வசந்த மண்டபத்தில் விஷ்ணு கமலர்ச்சனை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருமலையில் கார்த்திகை மாதத்தையொட்டி வசந்த மண்டபத்தில் விஷ்ணு கமலர்ச்சனை நடந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை கோவில் ஊழியர்கள் ஊர்வலமாக திருமலையில் உள்ள வசந்த மண்டபத்துக்குக் கொண்டு சென்றனர்.

வசந்த மண்டபத்தில் உற்சவர்களை வைத்து ஆகம பண்டிதர் மோகன ரெங்காச்சாரிலு தலைமையில் அர்ச்சகர்கள் தாமரை மலர்களால் விஷ்ணு கமலர்ச்சனை, சிறப்பு பூஜைகளை செய்தனர். தாமரை மலர்களால் ஆயிரம் முறை பாராயணம் செய்வது கமலர்ச்சனையின் சிறப்பாகும் என்று அர்ச்சகர்கள் கூறினர். அதில் ஆகம பண்டிதர் சுந்தரவரதன், தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »